மின் உற்பத்தி நிலையத்துக்கான நிலக்கரியுடன் இலங்கை வரும் கப்பல்

நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல் மின் நிலையத்தினது இப்பருவக்காலத்தின் மின் உற்பத்திக்கு தேவையான க‍டைசியும் 30 ஆவதுமான நிலக்கரி கப்பல் ‍எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியன்று புத்தளத்தை வந்தடையும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மின்சார சபையின் உற்பத்தி முன்னறிவிப்பின்படி, இந்த பருவத்திற்கான நிலக்கரி தேவை 30 கப்பல்கள் எனவும், 23 கப்பல்களிலிருந்து நிலக்கரி பெறப்பட்டுள்ளன.

மேலும், 24 ஆவது முதல் 26 ஆவது வரையான மூன்று கப்பல்கள் தற்போது புத்தளத்தை வந்தடைந்துள்ளதாகவும், 27 அவது தொடக்கம் 29 அவது வரையான இன்னும் மூன்று கப்பல்கள் மே முதலாம் திகதிக்கு முன்னர் புத்தளத்தை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே இப்பருவக்காலத்திற்கு தேவையான 30 ஆவதும் கடைசியுமான கப்பல் எதிர்வரும் முதலாம் திகதியன்று இலங்கையின் புத்தளத்திற்கு வரவுள்ளது. இதன்படி, லக்விஜய அனல் மின் நிலையமானது, இந்த பருவ காலத்தில் அதிகூடிய  கொள்ளளவில் இயங்குவதற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.