யாழ்.நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும்- மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ்.நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ்.மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, “போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முத்துதம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, யாழ்.மாநகர முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய பிரதேசமானது போதைப்பொருளினால், அச்சுறுத்தலையும், ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. தற்போது வெளிவரும் ஊடக செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற,கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளாகவுள்ளன.