சீனாவில் மீண்டும் ஒரு பயணிகள் விமானம் தீப்பற்றியது

273 Views

சீனாவில் பயணிகள் விமானம் தீப்பற்றியது

சீனாவின் தென்மேற்கு விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் புறப்படுவதற்கு ஆயத்தமான எயர்பஸ் ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரெனெ தீப்பற்றியதால் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை (12) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 113 பயணிகள் உட்பட 122 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வெளியேற்றப்பட்டவர்களில் 40 பேர் சிறு காயங்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பது வருடங்கள் பழமையான ஐரோப்பிய தயாரிப்பான Airbus SE A319 விமானத்தின் ஒரு இயந்திரம் திடீரென்று எவ்வாறு தீப்பற்றியது என விசாரணைகள் இடம்பெறுவதாக சீனா தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க தயாரிப்பான போயிங் விமானம் கிழக்கு சீனா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 132 பேர் கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply