இலங்கை மக்களுக்கு உதவ புதிய நன்கொடை திட்டம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது.

சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கைக்கு, அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் ஹனா சிங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

நன்கொடை வழங்க விரும்புவோர், www.undp.org/srilanka/donate என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து, நன்கொடையை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.