வடக்கில் அதிகரித்து வரும் இடைவிலகல் மாணவர்களின் எண்ணிக்கை

551 Views

2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வறுமை காரணமாக வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இடைவிலகல் வீதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் குறிப்பிடுகையில் வடமாகாணத்தில் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 485 மாணவர்கள், 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதன் பின்னர், பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு வெவ்வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

2021ஆம் ஆண்டில். 105 ஆகக் குறைந்துள்ளது, 2022ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகியுள்ளதாக கல்விப் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் கொழும்பில் வேலை தேடுவதற்காக மாகாணத்தை விட்டு வெளியேறியமையினால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply