பொருளாதார வீழ்ச்சியை நோக்கி உலகம் – மீண்டும் எச்சரிக்கை

உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன உலகத்தை என்றுமில்லாத மிகப்பெரும் பொருளாதார பின்னடைவுக்கு கொண்டு சென்றுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் மீண்டும் தெரிவித்துள்ளது.

உலகின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 3.2 விகிதமாக வீழ்ச்சிகாணும் நிலையை அடையும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அது 3.6 விகிதமாக இருக்கும் என கடந்த எப்பிரல் மாதம் கணிப்பிடப்பட்டிருந்தது. சீனாவினதும், ரஸ்யாவினதும் பொருளாதார நெருக்கடிகளும் இரண்டாவது காலாண்டு பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். கோவிட்-19 கால பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகளில் தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக நணய நிதியத்தின் பொருளியல் பிரிவின் தலைவர் பெரி ஒலிவியர் கொறிஞ்சஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதே தற்போதைய நெருக்கடிக்கான காரணம்.

இதனிடையே, இலங்கை மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து பங்களாதேசமும் அனைத்துலக நாணயநிதியத்திடம் உதவியை கேரியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.