இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் நடைபெறும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பெரும்பகுதியை இணைப்பதாக உறுதியளித்ததை பாலஸ்தீனிய மற்றும் பிராந்திய தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

தனது அரசியல் வாழ்க்கைக்காக போராடும் நெதன்யாகு, செப்டம்பர் 17 நடைபெறவிருக்கும் தேர்தலில் ஐந்தாவது முறையாக பதவியேற்றால் “ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கு சாக்கடல் இஸ்ரேலிய இறையாண்மையை உடனடியாகப் பயன்படுத்துவேன்” என்று கூறினார்.

இஸ்ரேலிய மனித உரிமைகள் குழு B’Tselem படி, சுமார் 65,000 பாலஸ்தீனியர்களும், 11,000 இஸ்ரேலியர்களும் மற்றும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளும் இப்பகுதிகளில் வசிக்கின்றனர் என குறிப்பிடுகிறது.

இப்பகுதிகளில் முக்கிய பாலஸ்தீனநகரமான எரிகோ, மற்றும் சுமார் 28 கிராமங்கள்,சிறிய பெடோயின் சமூகங்கள் உள்ளன.07ecfea2d6224bc7b70386c8b13c8469 18 இஸ்ரேலிய பிரதமரின் அடாவடி அறிவிப்பு;சீற்றத்தில் அரபுலகு

நெத்தன்யாகுவின் அறிவிப்புக்குப் பிறகு, கெய்ரோவில் நடந்த அரபு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் ,இஸ்ரேலிய பிரதமரின் தேர்தல் கால வாக்குறுதியை,

” சர்வதேச சட்டங்களை மீறும் நோக்கத்தைக் கொண்ட ஆபத்தான முன்நகர்வு ,புதிய வலிந்த பகமைச் செயற்பாடு என குறிப்பிட்டுள்ளது

இந்த அறிவிப்பு சமாதான முன்னெடுப்புகளின் முன்னேற்றத்திற்க்கான வாய்ப்புகளை ஆபத்துக்குளாகியுள்ளது மேலும் அதன் அனைத்து அடித்தளங்களை இது தகர்த்துவிடும் அரபு லீக்கின்
அறிக்கை குறிப்பிடுகிறது.

“சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் தொடர்ந்து அவமதிப்பதாக” கத்தார் அறிக்கையிட்டுள்ளது.

இணைப்பு உறுதிமொழியை “இனவெறி” என்று துருக்கி கூறியுள்ளது.

நெதன்யாகுவின் திட்டத்தை “தீவிரமான விரிவாக்கம்” எனஜோர்டான் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பில் ஆராய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அவசர கூட்டத்திற்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்தது.

இதற்கிடையில், நெத்தன்யாகுவின் திட்டம் “சர்வதேச ரீதியான சட்ட விளைவை ஏற்படுத்தாது” என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளயது