அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி, 21 காயம்

232
199 Views

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே பாரவூர்தி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.  அவர்கள் பொதுமக்கள் மீதும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  21 பேர் காயமடைந்தனர். பின்னர், அவர் தபால் கொண்டு செல்லும் பாரவூர்தியை கடத்தினார்.

இதுபற்றிய தகவல் அறிந்து கடத்தல்காரர்களை பிடிக்க காவல் துறையினர் உடனடியாக சென்றனர்.  பாரவூர்தியை மடக்கினர். அதில் இருந்தவர், போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார்.  அவர்கள், சினெர்ஜி என்ற திரையரங்கு அருகே கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றனர்.  அந்நபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் கூறினர். இரண்டு வாகனங்களில் இருந்தபடியே, அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், சினெர்ஜி என்ற சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதி பரபரப்பானது.

ஏற்கனவே, ஆகஸ்டு 4-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here