பேசுவதனால் அமெரிக்கா தனது பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்- ஈரான்

அமெ­ரிக்கா ஈரா­னுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள விரும்­பினால்  2015ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கையைப் பேணி  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்­பாட்டில் ஈடு­ப­டு­வதை நிறுத்த வேண்டும் என  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று  வியா­ழக்­கி­ழமை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

மலே­சிய கோலா­லம்பூர் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள அவர் அங்­கி­ருந்து ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்கம் அளிக்­கை­யி­லேயே இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  ஈரானின் அணு­சக்தி நட­வ­டிக்­கைக்கு கடி­வா­ள­மிடும் வகையில் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து  தனது நாட்டை கடந்த வருடம் வாபஸ் பெற்­றது முதற்­கொண்டு  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்கா அந்த உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து விலகி  ஈரா­னுக்கு எதி­ரான தடை­களை மீள நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­மைக்கு பதி­லடி கொடுக்கும் முக­மாக   ஈரான் அந்த உடன்­ப­டிக்­கையின் கீழான உறு­திப்­பா­டு­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யாக விலகும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

மேற்­படி தடைகள் தொடர்­பான நிவா­ரணம் அளிக்­கப்­ப­டா­விட்டால்  அந்த அணு­சக்தி உடன்­ப­டிக்கை தொடர்­பான மேலும் பல மீறல்கள்  எதிர்­வரும் செப்­டெம்பர் மாத ஆரம்­பத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் என ஈரான் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளது.

அமெ­ரிக்கா ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ரான பொரு­ளா­தார போரொன்றில் ஈடு­பட்­டுள்­ளது.  அமெ­ரிக்கா  ஈரா­னிய மக்­க­ளுக்கு எதி­ராக  பொரு­ளா­தார தீவி­ர­வா­தத்தில் ஈடு­பட்டு தடை­களை விதிக்கும் போரோன்றை முன்­னெ­டுத்­துள்­ளதை நிறுத்­தா­த­வரை எமக்கு அமெ­ரிக்­கா­வுடன் சந்­திப்பை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மில்லை”  என ஜாவத் ஸரீப்  தெரி­வித்தார்.

அவர்  கோலாலம்­பூரில் இடம்­பெற்ற இஸ்­லா­மிய உல­கி­லான பாது­காப்பு குறித்து நடை­பெற்ற கூட்­டத்தில்  கலந்து கொண்டு உரை­யாற்­றிய பின்­னரே ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆகையால் அவர்கள் (அமெ­ரிக்­கர்கள்) பேச்­சு­வார்த்தை இடம்­பெறும் அறைக்குத் திரும்ப வேண்­டு­மானால்  அவர்கள் ஒரு அனு­ம­திச்­சீட்டை கொள்­வ­னவு செய்ய வேண்­டி­யுள்­ளது. அந்த அனு­ம­திச் சீட்டு   அந்த உடன்­ப­டிக்­கையை (2015ஆம் ஆண்டு  அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை) பேணு­வ­தாகும்” என அவர் தெரிவித்தார்.

நாம் சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்திப்பை மேற்கொள்ள விரும்பவில்லை.  எமக்கு சந்திப்பை மேற்கொள்ள அது தொடர்பில் ஒரு பெறுபேறு தேவையாகவுள்ளது” என அவர் கூறினார்.

ஜாவத் ஜரீப் நேற்று மாலை மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டுடன் சந்திப்பை மேற்கொண்டார்.