பிரித்தானிய பாரா­ளு­மன்­றம் இடை­நி­றுத்தம் – வலுவாகும் எதிர்ப்புகள்

பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வ­தற்கு  எடுத்த தீர்­மானம்  குறித்து  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும்  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வில­கு­வ­தற்கு எதிர்ப்பைக் கொண்­ட­வர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் பிர­த­மரின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து நாட­ளா­விய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் பிர­த­மரின் பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்­து­வ­தற்­கான  திட்­டத்­திற்கு எதி­ராக சட்ட ரீ­தி­யான  சவால் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன்  ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் கையொப்­ப­மிட்டு முறைப்­பா­டொன்றை தாக்கல் செய்­துள்­ளனர்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து  ஒக்­டோபர் மாதம் வரை­யான 5 வாரங்­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்­வது  பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வது சம்­பந்­த­மான பிறிக்ஸிட் செயற்­கி­ரமம் தொடர்பில்  விவா­தத்தை  நடத்­து­வ­தற்­கான நேரத்தை அனு­ம­திப்­ப­தாக உள்­ள­தாக  அர­சாங்கம் கூறு­கி­றது.

இந்த நட­வ­டிக்கை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்கை எது­வு­மின்றி வில­கு­வ­தற்கு முட்­டுக்­கட்டை போடு­வதை தடுத்து நிறுத்­த ஜன­நா­ய­கத்­திற்குப் புறம்­பாக முன்னெடுக்கப்பட்ட முயற்­சி­யென அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

பாரா­ளு­மன்­றத்தை இடை­நி­றுத்தம் செய்யும் மேற்­படி திட்­டத்­திற்கு எலி­ஸபெத் மகா­ரா­ணியார்  நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை அனு­ம­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும்  இது நிச்­ச­ய­மாக பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து உடன்­ப­டிக்­கை­யின்றி வெளியே­று­வ­தற்­கான எதிர்ப்­பிற்கு தடை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு அர­சியல் நகர்­வல்ல  எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரி­வித்தார்.

பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட தின­மான ஒக்­டோபர் 31ஆம் திக­திக்கு பெரு­ம­ளவு நேரம் உள்­ள­தாக அவர் கூறினார்.

பிர­தமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தெரி­விக்­கையில், பாரா­ளு­மன்றம் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­ட­தற்கு பின்னர் எதிர்­வரும் ஒக்­டோபர் 14ஆம் திகதி மகா­ரா­ணி­யாரின்  உரை இடம்­பெ­ற­வுள்­ள­தாக குறிப்­பி­ட்டார்.

”இந்த நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்­கான  திட்­டங்­களை முன்­னெ­டுக்க பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கி­ய­தற்கு பிற்­பாடு  வரை காத்­தி­ருக்க தான் விரும்­ப­வில்லை” என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.

மகா­ரா­ணி­யா­ரு­ட­னான சந்­திப்பின் போது பங்­கேற்ற பாரா­ளு­மன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறு­கையில், இந்தப் பாரா­ளு­மன்­றத்தின் கூட்டத் தொட­ரா­னது  கடந்த 400 வருட காலத்­தி­லேயே மிகவும் நீண்ட கூட்­டத்­தொடர் ஒன்­றாக விளங்­கு­வதால்  அதனை இடை­நி­றுத்தி புதிய கூட்­டத்­தொடர் ஒன்றை ஆரம்­பிக்க உரிமை உள்­ளது என்று  தெரி­வித்தார்.