மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவு தின விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு நாளன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 277 பேர் உயிரிழந்ததுடன் 400ற்கும் அதிகமானோர் படு காயமடைந்தனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள்
இடம்பெற்றது.
அத்துடன் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் அமைக்கப்பட்ட தூபியில் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர் வளையம் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகம் – வந்தாறுமூலை மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவஞ்சலி செலுத்தினார்.







