ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.

பவார் 737 என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை  ஜனாதிபதி பார்வையிடுவதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகள் எங்களிடம் உள்ளதால் எங்களால் 300 கிலோமீற்றருக்கு அப்பால் வைத்து விமானங்களை இனம் கண்டு 200 கிலோமீற்றருக்குள் வைத்து அவற்றை அழிக்க முடியும் என ஈரானின் பாதுகாப்பு துறை அமைச்சர் அமீர் ஹட்டாமி தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது தேசிய பாதுகாப்பு தினத்திலேயே புதிய ஏவுகணை பொறிமுறையை காட்சிப்படுத்தியுள்ளது.

இதேவேளை ஈரான் வெளிநாடுகளிலிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகளை தொடர்ந்து அந்த நாடு உள்நாட்டில் பாரிய ஆயுத உற்பத்தியை ஆரம்பித்துள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.iran bavar 373 small ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.

இதேவேளை இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ருகானி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பயனில்லை என தெரிவித்துள்ளார்.

எங்கள் எதிரிகள் அர்த்தபூர்வமான விடயங்களை ஏற்றுக்கொள்வதில்லை  என தெரிவித்துள்ள அவர் எதிரி எங்களிற்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ளும்போது நாங்கள் உரையாற்றிக்கொண்டிருக்க முடியாது எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.