நல்லூர் திருவிழாவில் பொருத்தப்பட்ட ஸ்கானர்கள் அகற்றப்பட்டன

நல்லூர் கந்தசாமி கோவிலில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

நல்லூர் உற்சவத்தின் போது இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இதுவே பக்தர்களுக்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதால் இந்த விடயம் வடக்கு ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்கள்   பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக 14.08 அன்று புதிய ஸ்கானர் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதற்காக வாடகையாக சுமார் 3 இலட்ச ரூபாய் செலவிடப்பட்டது. இக்கருவிகள் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து பெறப்பட்டிருந்தது.

இது பக்தர்கள் செல்லும் போது, சிறிய உலோகப் பொருட்களுக்கும் அதாவது நகைகள், ஊசிகள் போன்ற பொருட்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனால் இந்த ஸ்கானர் இயந்திரங்கள் இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டன.