இந்திய பாகிஸ்தான் போர்

காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிற்கு அப்பால் கொத்து எறிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

தமது எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயல்வதாகவும், தங்கள் எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாலேயே தாங்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியா கூறுகின்றது.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு வருவதாலும், அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அந்த மாநில அரசு தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுகின்றது.