உலக நாடுகளின் அக்கறையின்மையே நீதி கிடைக்காமைக்கான மூலகாரணம் – ஆய்வாளர் பற்றிமாகரன்

“தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கடைசிக் கட்டங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமே தங்களைக் கையளித்தனர்”என உண்மைக்கு மாறான தகவலை சிறிலங்கா இராணுவத்தின் தகவல் தருதலுக்குப் பொறுப்பான பிரிகேடியர் சுமித் அட்டபத்து, தகவல் அறிதற்கான சட்டத்தின் கீழ் தகவல் கோரிய‘ தமிழ்மிரர்’ ஊடகவியலாளர் பி.நிரோஸ்குமார்க்கு அளித்த பதிலில் தெரிவித் துள்ளார்.

2012 இல் சிறிலங்கா இராணுவ விசாரணை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள, 2013இல் திரு. கோத்தபாய ராஜபக்ச ஊடகவியலாளர்களுக்குப் 11800 தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக அறிவிக்க, 2016இல் 58வது படைப்பிரிவின் தளபதி சரணடைந்தவர்களின் விபரப் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாகவும், 2018இல் ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சரணடைந்தவர்கள் இராணுவப் பாதுகாப்பில் இருக்கையில் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவற்றைச் சுட்டிக்காட்டி உண்மைக்கு மாறான தகவல்களை சிறிலங்கா இராணுவத் தகவல்தரு பிரிகேடியர் சுமித் அட்டபத்து வெளியிட்டுள்ளார் என்பதை 12.07.2019 இல் மீள்நினைவுபடுத்தியுள்ள சமுக ஊடகமான“ கொழும்பு டெலிகிராப்”இல் வெளிவந்த கட்டுரையின் கட்டுரையாளர் வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளார். “சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் குறித்த விடயங்களைக் கையாளும் அதிகார பூர்வமான நிறுவனம் மறுவாழ்வுக்கான பொதுமேல் ஆணையாளர் ஆணையமே ஆகும். அவர்களிடமே தயைகூர்ந்து தேவையான விபரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்”என சிறிலங்கா இராணுவத்தின் தகவல்தரு பொறுப்பாளர் பிரிகேடியர் சுமித் அட்டபத்து வழிகாட்டியுள்ளார் என்பதே அத்தகவல். இதன் மூலம் சிறிலங்கா இராணுவமே சிறிலங்கா அரசுமீதான அனைத்துலக யுத்தக் குற்ற விசாரணை ஒன்றே உண்மையை வெளிப்படுத்த முடியும் என்கிற தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது.

surrenter உலக நாடுகளின் அக்கறையின்மையே நீதி கிடைக்காமைக்கான மூலகாரணம் - ஆய்வாளர் பற்றிமாகரன்இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்டகாலம் முதலாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்களின் பாதுகாப்பையும் அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் உறுதி செய்வதற்கான முறைமையாக இலங்கைப் பாராளுமன்றதை 1948இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் உருவாக்கியது.

இனங்களுக்கோ மதங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் பிரித்தானியப் பிரிவிக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யலாம் என்ற சோல்பரி அரசியலமைப்பின் மாற்றப்பட முடியாததும் உறுதியானதுமான ஏற்பாட்டை இனங்களுக்கும் மதங்களுக்குமான பாதுகாப்புக்கான நிபந்தனையாக ஏற்றே, பிரித்தானிய காலனித்துவ அரசிடம் இழக்கப்பட்ட தங்களின் இலங்கைத் தீவிலான தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையையும் அரசியல் உரிமைகைளயும் மீளப்பெற வேண்டும் என்ற நோக்கில் சிங்களத் தேச இனத்துடன் இணைந்து சுதந்திரத்திற்காகப் போராடிய இலங்கைத் தமிழ்த் தேச இனத்தினர், சிங்களப் பெரும் பான்மையினரின் இலங்கைப் பாராளமன்ற ஒற்றை ஆட்சியில் தங்களின் இறைமையையும் பகிர்ந்துவாழச் சம்மதித்தனர் என்பது வரலாறு.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இலங்கைப் பாராளமன்றத்தின் இறைமை தொடர்ந்தும் பிரித்தானியாவிடமே தொடர்கிறது என இரஸ்யா ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையைத் தனியான உறுப்பு நாடாக அனுமதிக்கக் கூடாதென இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது இரத்து உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி 1956 வரை தடைசெய்தது. இலங்கைத் தமிழர்களுக்குப் பிரித்தானியாவே அதி உச்ச அதிகாரமுள்ள அரசாகத் தொடர்ந்தது என்பதை கோடீஸ்வரன் என்பவர் சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் வேலையில் இருந்துவிலக்கப்பட்டது தொடர்பாகப் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் செய்த மேன் முறையீட்டின் தீர்ப்பும் உறுதி செய்தது.

இதுவே சிங்கள பௌத்த பேரினவாதிகளை தன்னிச்சையாக சோல்பரி அரசியல் அமைப்பை மீறி 22.05.1972இல் இலங்கையை பௌத்தத்திற்கும் சிங்களத்துக்கும் முதன்மை கொடுக்கும் சிறிலங்கா குடியரசாகப் பிரகடனம் செய்து பிரித்தானிய முடிக்குரிய அரசாகத் தாம் தொடர்வதில் இருந்து விலகச் செய்தது.

இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் இறைமையைப் பகிரச் செய்த சோல்பரி அரசியலமைப்பைச் சிங்கள பௌத்த பேரினவாதிகள் வன்முறைப்படுத்தியதன் விளைவாகத் தமிழ் மக்களின் இறைமை தமிழ் மக்களிடமே திரும்பிவிட்ட இயல்பானநிலையில்இலங்கைத் தமிழர்கள் நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்டதினால் 1977 தேர்தலைத் தமக்கான குடியொப்பமாக அறிவித்துத் தங்களின் தேர்தல் அறிக்கையில் இதனைச் சிறிலங்கா சனநாயக முறையில் ஏற்றுக்கொள்ளவிட்டால் எந்த வழிகளினாலும் அடைவோம் எனவும் உறுதி செய்து அதற்கான மக்கள் தீர்ப்பையும் பெற்று இலங்கைத் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே உறுதிசெய்யும் தங்கள் விருப்பைஉலகுக்குஅறிவித்தனர்.

balakumar 1 உலக நாடுகளின் அக்கறையின்மையே நீதி கிடைக்காமைக்கான மூலகாரணம் - ஆய்வாளர் பற்றிமாகரன்இதன் பின் விளைவாகவே படைபலம் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பணிவைப் பெறும் சிறிலங்காவின் பௌத்தசிங்கள அரசாங்களின் திட்டமிட்ட முறையிலான தமிழின அழிப்புக்களையும் தமிழ்க்கலாச்சார இன அழிப்புக்களையும் நாளாந்தவாழ்வில் இனங்காணக்கூடிய அச்சங்களையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

இவை தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் அமைதியையும் வளர்ச்சியையும் பேணும் அரசாகத் தங்களைக்குடிகளாக அறிவிக்கும் சிறிலங்கா அரசு செயற்படுவதில்லை என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டை உறுதிசெய்வதினால் தாங்கள் உலகின் குடிகளாகவும் உள்ளனர் என்பதன் அடிப்படையில் தங்களின் வெளியகசுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி அனைத்துலக நாடுகளையும் உலக அமைப்புக்களையும் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் பிரிக்கப்பட முடியாத பிறப்பு உரிமையை நிலைநாட்ட உதவும் படி கேட்டுவருகின்றனர்.

இதன் முக்கியத்துவத்தை 2009 ஆண்டு முதல் இன்று வரை பத்தாண்டுகளாக இலங்கைத் தீவில் அதன் தொன்மையும் தொடர்ச்சியுமான குடிகளாகிய தமிழ் மக்களுக்கு நடாத்தப்பட்ட இன அழிப்புக்கள் தொடர்பான விசாரணைகளோ அல்லது மறுவாழ்வு முயற்சிகளோ எதுவும் தமிழ் மக்களுக்கான நீதியையோ சமத்துவத்தை யோசு தந்திரத்தையோ உறுதிப்படுத்தக் கூடிய முறையில் முன்னெடுக்கப்படாமை மீளவும் உறுதி செய்கிறது.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமே இவற்றுக்கான பொறுப்புக்கூறல் வேண்டுமென அதன் இராணுவத்தின் தகவல் தரு இராணுவ அதிகாரியே உறுதிப்படுத்தியுள்ளார். இது தங்களின் உள்ளக சுயநிர்ண உரிமை சிறிலங்காஅரசாங்கத்தால் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் மறுக்கப்பட்டு வருகிறது என்ற இலங்கைத் தமிழ் மக்களின் கூற்றைத் தெளிவாக்குகிறது.

இந்நிலையில் உலகெங்கும் புலம்பெயர் தமிழர்களாகவும் உலகின் பல நாடுகளின் சிறுபான்மையினமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயக மக்களின் உண்மையை வெளிப்படுத்தும் குரலாக ஒருமைப்பாட்டுடனும் உறுதியுடனும் காலந்தாழ்த்தாது அந்த அந்தநாட்டுச் சட்டங்களுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பச் செயற்படவேண்டிய அதிமுக்கியமான தேவையை இலங்கை இராணுவத்தின் தாம் சரணடைந்தவர்களுக்குப் பொறுப்பில்லையென்ற கை கழுவல் அறிவிப்பு முக்கியத் துவப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசாங்க மேசரணடைந்தவர்களுக்குப் பொறுப்பு என்பதை அதன் இராணுவமே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அனைத்துலக விசாரணை மூலமே தமிழ் மக்களுக்கான நீதியும் மறுவாழ்வும் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தி உலகநாடுகளின் அக்கறையின்மையே தமிழ் மக்களுக்கான நீதி கடந்தபத்தாண்டுகளாகக் கிடைக்காமைக்கான மூலகாரணம் என்பதையும் உறுதியுடனும் பலமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்புபுலம் பெயர் தமிழ் மக்களாகவும் உலகின் பலநாடுகளின் சிறுபான்மையினமாக அந்த அந்த நாட்டின் அரசியலில் பங்கேற்கும் உரிமையுள்ளவர்களாகவும் உள்ள ஈழத்தமிழர்களின் தலையாய வரலாற்றுக்கடமையாகிறது.

இலங்கை அரசாங்கத்தையும் உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் பொறுப்புக்கூறவைத்தல் புலம்பெயர் தமிழர்களின் ஒருங்கிணைத்த முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. காணமல் போனவர்கள் என்ற நிலையில் அவர்களைத் தேடித் தவித்துத் தினம் வாடித் துடித்து விடாது போராட்டங்கள் நடாத்திவரும் தாயக உறவுக ளுக்கு ஆறுதலளிக்கும் சத்திபுலம்பெயர் தமிழர்களிடமே உள்ளது என்பதை ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் உணர்ந்து செயற்பட வேண்டியநேரமிது.