ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண் ஒருவர் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெரல் என்பவரே அவராவார். ஜேங் குளுட் ஜங்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருப்பதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக உள்ள கிறிஸ்டினா லாகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக பெண் ஒருவர் தெரிவாகும் சந்தர்ப்பம் இதுவே முதற்தடவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் யாவும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.