கீரிமலையில் அடாத்தாக அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி – மீளளிக்கப்படும் என்கிறார் ஆளுநர்

யாழ்.கீரிமலையில் கடற்படைமுகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உரிமையாளர்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உரிமை கோரப்படும் பட்சத்தில் இழப்பீடு அல்லது காணியை வழங்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

கீரிமலை பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 62ஏக்கர் காணியை கடற்படையினர் தமது ஆழுகைக்குள் வைத்திருக்கின்றனர். இந்த காணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொகுசு மாளிகை ஒன்றையும் அமைத்திருந் தார்.

இந்நிலையில் குறித்த மாளிகை அமைந்துள்ள காணியையும், அதனை சூழவுள்ள காணியையும் உள்ளடக்கி, சுமார் 62ஏக்கர் காணியை சுற்றுலா அதிகார சபைக்காக சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. KIRIMALAI கீரிமலையில் அடாத்தாக அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி - மீளளிக்கப்படும் என்கிறார் ஆளுநர்

இந்நிலையில் மேற்படி அளவீட்டு நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தொிவிக்கவிருந்த நிலையில், நேற்​ைறய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் த​ைலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 62ஏக்கர் காணிக்கு 26குடும்பங்கள் உரிமைகோரும் நிலையில், 20குடும்பங்களின் தொடர்பு மட்டுமே தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மிகுதி 6குடும்பங்களின் தொடர்புகள் தமக்கு கிடைக்கவில்லை. எனவும் பிரதேச செயலக அதிகாாிகள் கூறியுள்ளனா். இதன்படி நாளை 4ஆம் திகதி குறித்த காணிகளை அளவீடு செய்வதெனவும், அளவீட்டின்போது அடையாளப்படுத்தப்படும் பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடமே மீள கையளிக்கப்படும்.