பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் அழைப்பு

பொலிஸ்மா அதிபர் புஜித ஜெயசுந்தர, மற்றும் முன்னாள் பாதுகாப்புச்  செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குற்றவாளி சந்தேக நபர்களாக இவர்கள் இருவரும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாலேயே இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். இத் தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வுப் பிரிவு பிரதானிகள் எச்சரிக்கை விடுத்தும் இவர்கள் அதனை அலட்சியப்படுத்தியமையாலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதல் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் இராஜினாமா செய்ய மறுத்தமையினால், பொலிஸ்மா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.   இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.