இந்திய வதைமுகாமில் ஈழத்தமிழர் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டம்.

இந்தியாவின் தமிழ்நாடு திருச்சியில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ‘சிறப்பு அகதிகள் முகாமில்’ தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று ஈழத்தமிழர்கள் தங்கள் விடுதலையினை வலியுறுத்தி தொடரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த குறிப்பிட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தமிழக பொலீசார் மற்றும் கியூபிரிவு பொலீசாரல் கைதுசெய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதுவும் இதுவரை எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் இவர்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்கள். 19.06.19 அன்று மூன்றாவது நாளாகவும் இவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

ஆனால் எந்த அதிகாரிகளும் இவர்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள வில்லை என்பது போராட்டகாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த வழக்கும், விசாரணையும் இல்லாமல் அடைத்துவைத்துள்ள தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டுமென,
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை தமிழர் பாஸ்கரன், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.