அமெரிக்க அமைதி நிறுவன பட்டியலில் இலங்கை 72ஆவது இடம்

அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை 2018 ஆம் ஆண்டில் 67ஆவது இடத்தில் இருந்த இலங்கை நடப்பாண்டில் 72ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

உலகிலுள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் உலகில் அமைதி நாடு என்ற வகையில் ஐஸ்லாந்து முதலிடத்தை வகிக்கும் அதேவேளை, தெற்காசிய நாடுகளில் நேபாளம் முன்னணியில் உள்ளது. இதேவேளை உலகில் அமைதியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் அமைதியற்ற நாடாக 163ஆவது இடத்தில் சிரியா இருந்தது. எனினும், இந்த வருடம் அது 162ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.