விமல் வீரவன்ச இல்லத்தில் அவசரமாக கூடிய எம்.பி.க்கள்! கம்மன்பிலவுக்கு ஆதரவு

எரிபொருள் விலை உயர்வு குறித்து ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வெடித்துள்ள நிலையில், அதிருப்தியடைந்த எம்.பி.கள் பலர் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் நேற்றுக் காலை அவசரமாகச் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

“எரிபொருள் விலை உயர்வுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி துறக்க வேண்டும்” என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் கோரிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதன் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

பொதுஜன பெரமுனவின் செயலாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று ஆராய்ந்ததாகத் தெரிவித்த அமைச்சர் நாணயக்கார, தான் உட்பட பெரும்பாலான அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஆதரவு தெரிவிக்கவே விரும்புவதாகக் கூறினார்.