மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு சிறைத்தண்டனை – தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

48
70 Views

பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆஷிஷ் லதா ராம் கோபினுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி ஆஷிஷ் லதா ரம்கோபின் (56),  எஸ்.ஆர். மகாராஜ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவன அதிபரிடம் ரூ. 3.22 கோடி அளவுக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அவருக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நீதிமன்றம் ஏழரை ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

காந்தியின் குடும்பத்தில் வழியாக வந்துள்ள அவரது கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக உள்ளனர்.

லதா ராம்கோபினுடைய உறவினர்களான கீர்த்தி மேனன், மறைந்த சதீஷ் துபேலியா, உமா துபேலியா மெஸ்த்ரின் ஆகியோரும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.

லதா ராம்கோபினின் தாய் இலா காந்தி, சுற்றுச்சூழல், மனித உரிமை விவகாரங்களில் குரல் கொடுத்தவர் என்பதற்காக தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல அரங்குகளில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here