முடக்க நிலையை கண்காணிக்க 20 ஆயிரம் பொலிஸார் களத்தில்

35
51 Views

போக்குவரத்து முடக்கத்தை கண்காணிப்பதற்காக நேற்றிரவு முதல் 20,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அவரது வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை நிறுவனங்கள் மூடப்படலாம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் போக்குவரத்து முடக்கம் மீறப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here