கொரோனா – இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்

32
43 Views

சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளம் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது.

ஒரு நாளில் சுமார் 100 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 10,000 வரை எட்டியுள்ளது.

நேபாள சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி,

கடந்த 24 மணி நேரத்தில் 9,127 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 139 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் சுமார் 4000 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமாகியுள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் கொரோனா இரண்டாவது அலை இளைஞர்களையே குறிவைத்துள்ளது.

நேபாளத்தில் தொற்று பாதித்தவர்களில் பெரும்பாலானோர், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here