ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல்- நம்பிக்கை வாக்கு கோரும் நேபாளப் பிரதமர்

19
25 Views

நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு கடந்தாண்டு டிசம்பர் 20-ம் திகதி பிரதமர் கே.பி.சர்மா ஒளி  பரிந்துரை செய்தார். இதை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அதிபரின் உத்தரவை இரத்து செய்தது.

இந்நிலையில், அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. இதில் வரும் 10-ம் திகதி  நம்பிக்கை வாக்கு கோரப் போவதாக  பிரதமர்  அறிவித்துள்ளார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here