இலங்கையில் 65 இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் சீனாவை விட அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன, ஆனால் இலங்கை அமெரிக்காவின் அல்லது இந்தியாவின் காலனித்துவ நாடு என யாரும் சொல்வதில்லை என இலங்கை நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவுக்கு சீனா 1114 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. அது அவர்களுக்கு இடையிலான நட்பை காட்டுகின்றது. பிரித்தானியாவும் சீனாவின் முதலீடுகளை வரவேற்கின்றது. சீனா தான் பொருளாதாரத்தின் சக்தி மையம் ஆகும்.

சீனா பொருளாதாரத்தில் வளர்ந்து வருவதை சில நாடுகள் விரும்பவில்லை. இலங்கையில் இந்தியாவை சேர்ந்த 65 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ஆனால் இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடு என யாரும் கூறுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.