“சிவராம் இல்லாமல் தமிழர் அரசியல், தரகு அரசியல் ஆனது”- காணாமல் போனோர் கருத்து

சிவராம் இல்லாமல் தமிழ்த் தேசிய அரசியல் தரகு அரசியலாகிவிட்டதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும், ஆய்வாளருமான மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் நினைவு கூரப்பட்டது.

IMG 20210428 WA0054 “சிவராம் இல்லாமல் தமிழர் அரசியல், தரகு அரசியல் ஆனது”- காணாமல் போனோர் கருத்து

வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த நினைவு நாள்  நினைவு கூரப்பட்டது.  இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையானது, “ஜனநாயகத்துக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்டநாள். தமிழர் பூகோள அரசியலை அன்றே கணித்து உருவாக்கிய தராகி சிவராம் இல்லாமல் தமிழ்த்தேசிய அரசியல் சில்லறை தரகு அரசியல் ஆகிவிட்டது” என  காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.