மே தினப் பேரணியைக் கைவிட அரசியல் கட்சிகள் தீர்மானம்

மே தினப் பேரணியைக் கைவிட அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ள தாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, கொரோனா தொற்றின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கோவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் மேதினப் பேரணியை கைவிடவேண்டும் எனவும்,   இந்தியாவைப் போன்று இலங்கையிலும் கொரோனா தொற்று பரவாதிருக்க மே தினத்தில் பேரணியை முன்னெடுக்க வேண்டாம் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார் ன்பது குறிப்பிடத்தக்கது.