யாழில் இது வரையில் 17 பேர் கொரோனா தொற்றால் பலி

36
68 Views

யாழ்.குடாநாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக யாழில் மேலும் ஒருவர் இன்றைய தினம் காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியை சேர்ந்த 59 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இருவரது சடலங்களும் சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். குடாநாட்டில் இது வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here