இலங்கையில் அமைதியும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

102
180 Views

இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தை அடைவதற்கு , எங்களுக்கு அமெரிக்காவே தேவை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here