யாழ்.பல்கலையில் மீளமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஏப்ரல் 23 இல் திறக்கப்படும்

68
126 Views

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் அழைப்பில் துணைவேந்தர், பேராசிரியர் சிறி சற்குணராஜா இதனைத் திறந்துவைக்கவுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணி மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here