துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 41 பேர் பலி

33
74 Views

உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயணத்தின் போது அகதிகள் செல்லும் படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள்  செல்லும்  நோக்கத்தோடு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த  40-க்கும் மேற்பட்ட அகதிகள் நேற்று முன்தினம் பயணத்தை  மேற்கொண்ட போது, படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து , கடலில் மூழ்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது,   41 அகதிகள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது தெயவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்றும் எஞ்சியோரின் உடல்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் அவற்றை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துனிசியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here