பயங்கரவாதக் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் முல்லைத்தீவில் ஒருவர் கைது

72
115 Views

பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் நான்கு பேர்  கைது  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

45 அகவையுடைய பாடசாலை வீதி வள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரரே இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here