அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப் படும் அபாயத்தில் மியான்மர் நாட்டவர்கள்

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இவ்வாறான தருணத்தில், அவுஸ்திரேலியாவில் விசா காலாவதியாகும் நிலையில் உள்ள மியான்மர் நாட்டவர்களை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விசா காலாவதியாகும் நிலையில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்களை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத கணக்குப்படி, மியான்மரைச் சேர்ந்த 3,366 விசாவாசிகள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். அதில் 1,680 பேர் மாணவர்கள், 612 பேர் இணைப்பு விசாக்களில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.