பூகம்பத்தில் நின்று, 10 ஆண்டுகளின் பின் மீண்டும் இயங்கும் கடிகாரம்

கடந்த 2011ஆம் ஆண்டு பூகம்பத்திற்குப் பின் இயங்குவதை  நிறுத்திய  100 ஆண்டு பழமையான ஜப்பானின் கடிகாரம், இந்த ஆண்டு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தையடுத்து அது மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

Buddhist  கோவிலில் வைக்கப்பட்டிருந்த இந்த கடிகாரம், ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சுனாமியால் சேதமடைந்த நிலையில் அக் கோயிலைச் சேர்ந்த மத குருவால் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், அது மீண்டும்  ஏற்பட்ட பூகம்ப அதிர்வுகளைத் தொடர்ந்து இயங்க ஆரம்பித்துள்ளது.

2011ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் 18,000க்கு  அதிகமான மக்கள் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.