மியான்மர்: ஆட்சி கவிழ்ப்புக்கு மத்தியில் பிரபல நடிகர் கைது

கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் மீது அதிகரித்து வரும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக மியான்மரின் மிகவும் பிரபலமான  நடிகர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட ஒரு (modle) மோடலும் நடிகருமான பைங் தாகோன் ஆன்லைன் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தனிப்பட்ட பேரணிகளில் தீவிரமாக  கலந்துகொண்டிருந்தார்.

 ஒரு மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள் இருந்த அவருடைய  இன்ஸ்டாகிராம்   –  மற்றும் முகநுால் கணக்குகள்  முடக்கப்பட்டுள்ளது.

Paing Takhon

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இதுவரை அங்கு 43 சிறுவர்கள் உட்பட600-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள், சிவில் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாகோனின் சகோதரி தி தி லிவின் (Thi Thi Lwin) முகநுால் பதிவின் படி, எட்டு இராணுவ வாகனத்தில் சுமார் 50 வீரர்கள்  இன்று அவரைக் கைது செய்ய வந்தனர் என்று பதிவிட்டுள்ளார்.