இந்தியா- சிறீலங்கா படை ஒத்திகை – பார்வையாளர்களாக மேற்குலகம்

89
143 Views

இந்த வார இறுதி நாட்களில் பங்களதேசத்தில் சிறீலங்கா மற்றும் இந்தியா உட்பட நான்கு நாடுகள் மேற்கொள்ளும் படை ஒத்திகையினை பார்வையிடுவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்க படை அதிகாரிகள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 4 ஆம் நாளில் இருந்து 12 ஆம் நாள் வரை இடம்பெறும் இந்த ஒத்திகையில் இந்தியா, சிறீலங்கா, பூட்டான் மற்றும் பங்களதேஸ் ஆகிய நாடுகளின் படையினர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த ஒத்திகையை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, சவுதி அரேபியா, குவைத் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த படை அதிகாரிகள் வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைதி நடவடிக்கைக்கான படை ஒத்திகை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளிகள் என இனங்காணப்பட்ட இராணுவத்தினரை கொண்ட சிறீலங்கா பங்குபற்றுவது தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here