31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் – விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

தமிழ் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் 31 தமிழ்ப் புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று அதிகாலை ஜேர்மனியின் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலாத்காரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

2 1 31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் - விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

நேற்று பகல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இரகசியமாக இவர்கள் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இலங்கை நேரம் 1.00 மணியளவில் அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்டனர்.

ஸ்பானிஸ் விமானமான Wamos Air flight PLM / EB 308 விமானத்திலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்ட புகலிடம் மறுக்கப்பட்ட தமிழர்கள் இரகசிய இடங்களில் நாடுகடத்தப்படுவதற்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். நேற்றைய தினம் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, மனித உரிமை அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என வலியுறுத்திவந்தன. ஜேர்மனியிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் நேற்றுப் பகல் டுசில்டோவ் சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து நூற்றுக்கணக்கான தமிழர்களும், மனித உரிமை அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்தைச் சூழ்ந்துகொண்டுள்ளார்கள். தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் பலருடைய தொலைபேசிகள் நேற்று மாலையுடன் செயலிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உறவினர்கள் சிலர் நாடு கடத்தப்படவுள்ளவர்களை விமான நிலையத்தில் சந்திக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான அனுமதி இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டது. இதனால், அவர்கள் கடும் ஏமாற்றமடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

1 242 31 தமிழர்கள் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தல் - விமான நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டம்

 டுசில்டோவ் விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு ஜேர்மன் நேரம் 9.16 மணியவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.00 மணழயளவில் புறப்பட்ட விமானத்தில் இந்த 31 புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக ஏற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு வரையில் விமான நிலைய சுற்றாடல் தமிழர்களால் நிறைந்திருந்ததுடன், பதற்றமான நிலையும் காணப்பட்டது.