சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

‘2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் .நாமனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்களின் மேன்முறையீடு’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

“கீழே ஒப்பமிட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது குறிப்பாக தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும், விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றமை மற்றும் தமிழப் பெண்களை வன்புணர்ந்தமை அடங்கலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட கொடூரமான குற்றங்களின் பொருட்டான சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலைப் பூர்த்திசெய்யவில்லை எனக் கருதுகிறோம்.

WhatsApp Image 2021 03 07 at 7.43.06 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குவதற்கான மேன்முறையீட்டின் பொருட்டு நாம் இதனை வரைகிறோம்.

WhatsApp Image 2021 03 07 at 7.43.55 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

நிலவரத்தின் தீவிரத்தன்மையின் காரணமாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இந்த அழைப்பானது அண்மையில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியின் மூலமாக வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.

WhatsApp Image 2021 03 07 at 7.44.34 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றின் பொருட்டு நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையையும் நாம் இழந்துள்ளமையினாலேயே இவ் வேண்டுகோளை நாம் விசேடமாக தங்களிடம் வலியுறுத்திக் கோரியிருந்தோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.  “இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

WhatsApp Image 2021 03 07 at 7.45.12 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான வர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.

அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர்.

2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்படட யுத்தமூல விதவைகள் உள்ளனர்.

WhatsApp Image 2021 03 07 at 7.45.47 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு

அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அறிமுகப்படுத்த தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர நாம் விரும்புகின்றோம்.

முன்னைய அரசாங்கமானது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது மாத்திரமல்லாது, முரணாக சனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் தாம் (UNHERC)  தீர்மானத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருப்பதாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30-1,34-1 மற்றும் 40-1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன் UNHERC பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளது.

மேலும் UNHERC இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களை கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதைய சனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

WhatsApp Image 2021 03 07 at 7.46.21 PM சிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை

அத்துடன் போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் யுத்த நாயகர்களாக ஆகவும் மதிப்பளிக்கப்படுகின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக்குற்றவாளியாக சந்தேகப்படுகின்ற ஓர் உத்தியோகத்தகர் நான்கு நட்சத்திர அதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

எமது மேன்முறையீட்டைத் தீவிரதன்மையுடன் கருத்திற் கொள்வதன் பொருட்டும் இலங்கையைச்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ( ICC ) பாரப்படுத்தப்பட வேண்டியமையை உள்ளடக்குவதன் பொருட்டும் மேன்முறையீட்டை நாம் மேற்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.