தமிழக சட்டசபை தேர்தல்- தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ அறிவிப்பு

39
81 Views

சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தல்  குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ம.தி.மு.க. வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவர். அதையே கட்சியினர் விரும்புகின்றனர்.

எத்தனை தொகுதிகள்,  பொதுச் சின்னம் என்ற வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. தி.மு.க. கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நாங்கள் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து விடும். நல்லதையே எதிர்பார்ப்போம்.

அதிக இடங்களில்  தி.மு.க. போட்டியிட விரும்புவது அவர்களின் உணர்வு, நியாயம். தேர்தல் அறிக்கை பணிகள் நடக்கின்றன. அதை வெளியிட்ட பின் பிரசாரம் துவக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here