வலுவடைந்து வரும் அமெரிக்க சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா – சீனாவிற்கிடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் வலுவடைந்து வரும் நிலையில் சீன கம்êனிஸ்ட் கட்சி, “வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்” என்று தெரிவித்துள்ளது.

சில காலமாக அமெரிக்கா – சீனாவிடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகின்றது. மேலும் அமெரிக்காவுக்கு “ரேர் ஏர்த்ஸ்” என்று சொல்லப்படும் பொருளைக் கொடுக்காமல் இருந்து வர்த்தகப் போரை தனக்கு சாதகமாகக் கொண்டுவர சீனா தயங்காது என்றும் கூறப்படுகின்றது.

“ரேர் ஏர்த்ஸ்“ என்பது 17 வேதியல் மூலப் பொருட்கள் கொண்ட ஒரு பொருள். அது நவீன மின்னணுப் பொருட்கள் முதல்  இராணுவ ஆயுதங்கள் செய்வது வரை பயன்படுத்தப்படுகின்றது. இது அமெரிக்காவிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இருக்கும் நிறுவனக் கட்டமைப்பு என்பது மிகவும் சிக்கல்களைக் கொண்டது. இப்படிப்பட்ட ஓர் அமைப்பில் வர்த்தகப் போர் நடந்தால் யாராலும் வெல்ல முடியாது. இதனால் தங்களை குறைத்து மதிப்பிட வேண்டாமென சீனா எச்சரித்துள்ளது

1978ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போதும் சீனா இதுபோன்ற எச்சரிக்கை விடுத்திருந்தது.

2014 முதல் 2017 வரை அமெரிக்கா இறக்குமதி செய்த “ரேர் ஏர்த்“ஸில் 80% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.