மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் – திலும் அமுனுகம எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக கிடைக்கும் மூன்றில் இரண்டு பெரும்பாண்மைகக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நீதியை நிலை நாட்டாமல் இருக்கமாட்டோம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குல்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன உட்பட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவேண்டும்.

இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை காப்பாற்றிக்கொள்ள அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கான நீதி கிடைக்கப்பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையை பெற்றுக்கொடுத்தனர். ஆனால் அந்த நீதி கிடைக்கப்பெறாவிட்டால், மக்கள் அதற்கான பதிலை வழங்குவர்” என அவர் தெரிவித்தார்.