சீன இராணுவம் குறித்து அவதுாறு பேச்சு – 6 பேரை கைது செய்த காவல்துறை

25
38 Views

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன இராணுவ வீரர்களைக் குறித்து தவறாக கருத்துப் பதிவிட்டதாகக் கூறி க்வி (Qiu) என்கிற சீன வலைத்தள பதிவர் ஒருவர் சீன காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 3,440 கிலோமீட்டர் நீளும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டு (லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்) எல்லைப் பகுதியில் கடந்த பல தசாப்தங்களாக இரு நாட்டு இராணு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கின்றனர்.

இதில் அண்மையில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் இரு தரப்பில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து இரு நாடுகளும் தங்கள் தரப்பு இராணுவத்தை பின் வாங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றன.

இந்நிலையிலையே 38 வயதாகும் க்வி என்ற நபர், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நடந்த மோதலை, “மிக மலினமாக உண்மையைத் திரித்துக் கூறினார்” என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். “சீனாவின் நாயகர்கள் மற்றும் சீனாவுக்காக உயிர்நீத்தவர்கள் குறித்து அவதூறு பேசத் தடை” என 2018ஆம் ஆண்டில் சீனா ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்நிலையில், சீனா தனக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் மீது, “சண்டை போடுவது மற்றும் பிரச்னைகளைத் தூண்டுவது” என்கிற குற்றத்தின் கீழ் வழக்கு தொடரும். அதே பிரிவின் கீழ் தான் க்வியையும், சீன இராணுவ வீரர்களை விமர்சித்த பலரையும் பதிவு செய்திருக்கிறது.

ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் என்ன கூறினார்கள் என்பதை சீன அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here