சிறீலங்காவின் அவசர கடிதத்திற்கு இந்தியாவிடமிருந்து பதில் இல்லை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவை கோரி இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு புதுடில்லி இன்னமும் உத்தியோகபூர்வமான பதிலை வழங்கவில்லை.

மனித உரிமை பேரவை அமர்வில் இந்தியாவின் ஆதரவை கோரி சிறீலங்கா பிரதமர் நரேந்திரமோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜெனீவா அமர்வில் இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மோடியிடம் சிறீலங்கா வேண்டுகோள் விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் அறிவிக்கவில்லை என கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்தியா சாதகமான விதத்தில் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.