இணை அனுசரணை நாடுகளின் நகல் தீர்மானத்தில் என்ன உள்ளது?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறீலங்கா குறித்து சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் ஆரம்ப நகல்வடிவில் எதிர்கால விசாரணைகளிற்காக ஆதாரங்களை பாதுகாக்கும் ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீர்மானத்தின் ஆரம்பநகல் வடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கை குறித்த தீர்மானத்தின் தற்போதைய நகல்வடிவில் காணப்படும்  மிகமுக்கியமான புதிய விடயம் இது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் காணப்படாததை சுட்டிக்காட்டும் நகல்வடிவ ஆவணம், மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக  ஜனாதிபதி உருவாக்கியுள்ள புதிய ஆணைக்குழு சுயாதீனமற்றது எனவும் குறிப்பிடுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறீலங்கா தீர்மானங்களை பின்பற்றியமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் 2022 மார்ச்சில் எழுத்து வடிவிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்  எனவும் நகல்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  2022 செப்டம்பரில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.