சிறீலங்காவில் கருவாடு இறக்குமதிக்கு தடை – கருவாடுகளுடன் மீனவர்கள்  போராட்டம்

81
175 Views

சிறீலங்காவில் தற்போது கருவாடு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,இராமேஸ்வரத்தில் கருவாடுடன் மீனவர்கள்  போராட்டம் நடத்தியுள்ளனர்.

சிறீலங்காவில் தற்போது கருவாடு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், தமிழகம் தூத்துக்குடி துறைமுகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் உயர் ரக கருவாடுகள் தேங்கியுள்ளதன் காரணமாக கருவாடு ஏற்றுமதியாளர்கள்,வியாபாரிகள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் துறைமுகத்தில் தேங்கியுள்ள கருவாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here