அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரித்தானிய வழக்கறிஞர் நியமனம்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்கறிஞராக பிரித்தானியாவைச் சேர்ந்த கரீம் கான் (50) நியமனம் பெற்றுள்ளார்.

பிரதான வழக்கறிஞரை தெரிவு செய்வதற்கு இடம்பெற்ற தேர்தலில் 123 உறுப்பு நாடுகளில் 72 நாடுகள் கானுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்த பதவிக்கு பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டியிட்ருந்தனர்.

இவரின் நியமனத்தை வரவேற்றுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டெமினிக் ராப்,  அனைத்துலக சட்டவிதிகளில் அதிக அனுபவம் வாய்ந்த கான், உலகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுதருவதற்கு பணிபுரிவார் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் யுகோஸ்லாவாக்கியா மற்றும் றுவாண்டா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டவாளர்களில் கானும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.