சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை

சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின்  லூஜின் அல் ஹத்லால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

சவுதிஅரேபியாவில் நீண்ட காலமாக பெண்கள் மீது பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில்    முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்டவை முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

ஆனால்,  சவுதி அரேபியின் இளவரசர்  முகம்மது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பின்  பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.