சீனா அயல் நாடுகளை மிரட்ட முயற்சிக்கின்றது – அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா அயல் நாடுகளை மிரட்ட முயற்சிக்கின்றது  என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட்பிரைஸ்,

சீனா, தன்னுடைய அயல் நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளளோம். பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும். மேலும் இந்தியா  சீனா மோதல் விவகாரத்தில் அங்கிருக்கும் நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம்” என்றார்.

இதேவேளை, பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய இராணுவத்தினர் வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில், எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.