விமல் வீரவன்ச வீட்டில் நடந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு புலனாய்வு முகவர்கள்?

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சர் விமல்வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடம் சம்பளம் பெறும் இரு புலனாய்வுபிரிவினரும் காணப்பட்டனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் தலைமையில் அவரது வீட்டில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது நாங்கள் அதனை அவதானித்துக்கொண்டிருந்தோம் அந்த கலந்துரையாடலின் பின்னணியில் இரு மருத்துவர்கள் காணப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் பணம் வழங்குகின்றன என குறிப்பிட்டுள்ள ரேணுகாபெரேரா இதனைநான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தெரிவிக்கின்றேன் தேவைப்பட்டால் எங்களால் அவர்களின் பெயர்கைள வெளியிடமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அரசியல் செயற்பாடுகள் நடத்தைகள் குறித்து நீண்டகாலமாக ஆராய்ந்த பின்னரே நாங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளோம், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.